முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கர்மவீரர் காமராஜரை சிறப்பிக்கும் வகையிலும், அவரது சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும். பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் விருதுநகர் நுழைவாயிலில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தில், காமராஜர் மாணவ மணிகளை தன் இருபக்கமும் பாசத்தோடு அனைத்துக் கொண்டிருக்கும் முழுஉருவ வெண்கலச் சிலை, சிற்ப முற்றம் 50 அடி உயரம் கொண்ட அணையா தீபம், செயற்கை நீருற்று போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் காமராஜர் மணிமண்டப வளாகத்தில், மலர் தோட்டம், உணவகம், பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரிவடிவம், மாநாட்டுக்கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன், ஐ.எஸ். இன்பதுரை மற்றும் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) ஏ. கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ. சங்கர், பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர். சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து