முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 14,000 ஆக்கிரமிப்புகள் அகற்றம் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னையில், பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட 71268 ஆக்கிரமிப்புகளில், தற்போது வரை 14,098 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளும் படிப்படியாக அகற்றப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தாம்பரம் தொகுதி தி.மு.க. உறுப்பினர் ராஜா, மற்ற நகரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட, தாம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். சென்னை நகரை விட, தாம்பரத்தை சுற்றித் தான் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எனவே தாம்பரம் பகுதியில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தாம்பரத்தை சுற்றியுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததற்காக, பொதுப்பணித்துறைக்கு, நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. ஆக்கிரமிப்புகள், ஒரு சில ஆண்டுகளில் வந்தவை அல்ல. தி.மு.க. ஆட்சி காலம் தொட்டு பல ஆண்டுகளாக ஏற்பட்டவை ஆகும். அடையாறு, கூவம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 71,268 ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன . அவற்றில் தற்போது வரை 14,400 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அகற்றப்படும் வீடுகளில் வசிப்போருக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டியிருக்கிறது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது .  மேலும், பொதுப்பணி்த்துறையின் கீழ், 14,098 ஏரிகள் உள்ளன . ஏரிகளை முறையாக பராமரிக்கவும், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து