முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மீண்டும் தீவிரமடையும் - இந்தியா வானிலை மையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ம் தேதி தான் தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது. கேரளாவில் நாளை 18-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை மூலமே கேரளாவுக்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில்  18-ம் தேதி முதல் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதே போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த மழை நாளை 18-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சிறையின்கீழ், கோவளம், விழிஞ்சம், வடகரா போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து