முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயினை சந்தித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 241 ரன்களை, இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சேஸ் செய்தது. எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இதனால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை விட அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் வெற்றிப் பெற்றது. இதனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி முதன்முறையாக சொந்த மண்ணிலேயே கைப்பற்றியது. இதனை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேயினை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து