முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 4 ரன்களை நிராகரித்த பென் ஸ்டோக்ஸ் - சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீரர்

புதன்கிழமை, 17 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மார்டின் கப்டில் அடித்த பந்து பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஓடி எடுத்த 2 ரன்களுடன் கூடுதலாக 4 ரன்கள் என 6 ரன்கள் கிடைத்தது. மேலும் இந்தப் போட்டியின் போக்கை மாற்றிய தருணமாகவும் இது அமைந்து  விட்டது.

இந்நிலையில், ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த ரன்களை தனக்கு வழங்க வேண்டாம் என களத்தில் இருந்த நடுவர்களிடம் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் விதிகளின் அடிப்படையில் பீல்டர் ஏறியும் பந்து தடுக்கப்படாமல் பவுண்டரிக்கு சென்றால் அது ரன்களாகத் தான் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். இந்த விதியை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அந்த காட்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் இது குறித்து களத்தில் இருந்த நடுவரிடம் சென்று அந்த 4 ரன்களை வழங்க வேண்டாம் என பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டது தொடர்பாக நான் மைக்கெல் வானுடன் விவாதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து