முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வுக்குழுவிடம் ஓய்வு தேவையில்லை என கூறிய கோலி

புதன்கிழமை, 17 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் விராட் கோலி விளையாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடக்கும் தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அப்படியென்றால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். இதுவரை அப்படித்தான் நடந்து வந்தது.

ஆனால், உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமனம் செய்ய வேண்டும். இவர் தலைமையில் 2023 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய வேண்டும் என்ற பேச்சு காற்றில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் தேர்வுக்குழுவிடம் எனக்கு ஓய்வு தேவையில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவியை கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு விராட் கோலி உஷாராகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து