முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விருது.

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த  மாணவர்களுக்கு அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாரட்டிய நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 
 ராமேசுவரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்து குறைந்த பட்சம்  200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மேல் படிப்பிற்கு வெளியேறுகின்றனர்.இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்த பள்ளியில் 1985 மற்றும் 1986 ஆம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் விழுதுகள் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்,நிதி உதவி வழங்கி விருகின்றனர்.அதன் பேரில் இந்த ஆண்டில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்தார். விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் மோகன்  வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில்  ராமேசுவரம் வட்டாட்சியர் அப்துல்ஜபார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுந்தர் ஆகியோர்கள் முன்னிலை வகித்து சிறைப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் ,வர்த்தக சங்க  செயலாளர் பி.என்,சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருணாகரன்,தமிழ்தாய் அறக்கட்டளை நிர்வாகி கராத்தே பழனிச்சாமி,விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் துரைராஜ்,உமாசங்கர் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 6 பேருக்கு விழுதுகள் அறக்கட்டளை சார்பில் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் நிதியுதவியாக  ரூ. 24 ஆயிரம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் விழுதுகள் அறக்கட்டளையின் நிர்வாகி எம்.கே.எம் முனியசாமி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ராமேசுவரம் ரோட்டரி சங்க முன்னாள் நிர்வாகி பொறியாளர் முருகன்,நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செயலாளர் களஞ்சியம், கம்பன் கழக பொருளார் ராமச்சந்திரன், சமூக ஆர்வாளர் தில்லைபாக்கியம்,பள்ளி ஆசிரியர்கள் ஜெயக்காந்தன்,பழனிச்சாமி உள்பட மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து