கள்ளிக்குடி தாலுகா எம்.புதுப்பட்டியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்: மதுரை கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      மதுரை
18 tmm news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா எம்.புதுப்பட்டியில்  தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமினை மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர்  தொடங்கி வைத்து  ரூ.7லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தபட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி நேற்று திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள  எம்.புதுப்பட்டி கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த முகாமிற்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி வட்டாட்சியர் மூர்த்தி வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் கலந்து கொண்டு தலைமையேற்று பயனாளிகள் 142 பேருக்கு ரூ.7லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை,நிவாரண நிதியுதவி,பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.இந்த முகாமில் தமிழகஅரசின் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.
-

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து