மல்லையா சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்: இங்கிலாந்து ஐகோர்ட்டில் இந்திய வங்கிகள் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      உலகம்
Mallya 10-09-2018

தொழிலதிபர் விஜய் மல்லையா தமது சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்திய வங்கிகள் சார்பில் இங்கிலாந்து ஐகோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான இந்திய வங்கிகளின் குழு ஒன்று லண்டன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொகையை வசூலிக்க அவருடைய சொத்துகளை முடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. இரண்டு சூப்பர் பாய்மர கப்பல்கள், ஒரு சூதாட்ட விடுதி, கணக்கற்ற விலை உயர்ந்த கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ஓவியங்கள், முன்பு எல்டன் ஜான் பயன்படுத்திய விலை உயர்ந்த பியானோ போன்றவை விஜய் மல்லையாவின் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் உள்ளன. இந்த சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு வங்கிகள் நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளன. மேலும் விஜய் மல்லையா தமது சொத்துகளைக் குறித்து உண்மையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வங்கிகளின் கோரிக்கையில் நியாயமிருப்பதாக தெரிவித்த நீதிபதி ராபின் நோயல்ஸ் பட்டியலிடப்பட்ட சொத்துகள் மல்லையாவின் உறவினர்கள் பெயரில் இருப்பினும் அவை மல்லையாவின் சொத்துகள் தாம் என்பதை நிரூபிக்க வைக்கப்பட்டுள்ள வாதங்கள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து