அமர்நாத் யாத்திரை: 22 நாட்களில் 2.85 லட்சம் பேர் பனி லிங்க தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Amarnath Ice Lingam 2019 07 23

ஜம்மு : அமர்நாத் யாத்திரை தொடங்கிய 22 நாட்களிலேயே, கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 2.85 லட்சம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவ்வகையில், இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடையும் இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டில் அமர்நாத் யாத்திரை தொடங்கிய 22 நாட்களிலேயே கடந்த ஆண்டு பனிலிங்கத்தை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 2.85 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர். இந்த ஆண்டில் யாத்திரை தொடங்கிய 22 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 6 பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து