நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி: பார்சிலோனாவை வீழ்த்தியது செல்சி

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      விளையாட்டு
Chelsea beat Barcelona 2019 07 23

ஜப்பானில் நடைபெற்ற பிரீ - சீசன் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என வீழ்த்தியது செல்சி.

ஐரோப்பிய நாடுகளில் 2019-20-ம் ஆண்டுக்கான கிளப் கால்பந்து லீக் தொடர்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன் நட்பு ரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா - இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணிகள் மோதிய ஆட்டம் நேற்று  ஜப்பானில் நடைபெற்றது.ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் செல்சி அணியின் டேமி ஆப்ரஹாம் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சி 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் நீண்டநேரம் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் செல்சி அணியின் ராஜ் பார்க்ளே ஒரு கோல் அடிக்க செல்சி 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) பார்சிலோனா அணியின் ராகிடிச் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் செல்சி 2-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து