பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      விளையாட்டு
SL cricket board pak 2019 07 23

பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட அளிக்கப்பட இருக்கும் பாதுகாப்பு குறித்து ஆராய இலங்கை அதிகாரிகள் நேரில் சென்று ஆராய உள்ளனர்.

இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. லாகூர் மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பஸ்சில் சென்ற போது எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் வீரர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை வீரர்கள் காயத்தோடு அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினர். இதனால் அத்துடன் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பினர். அதில் இருந்து முக்கியமான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 10 வருடமாக எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் ஆனால் எந்த அணியின் மனதையும் மாற்ற முடியவில்லை. இந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 போட்டிகளை பாகிஸ்தான் மணணில் நடத்தி பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்பான வகையில் கிரிக்கெட் விளையாடலாம் என்று பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அக்டோபர் மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்தத் தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற வேண்டும் என விரும்புகிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் கீழ் வருகிறது. சமீபத்தில் லண்டனில் ஐ.சி.சி. பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய இலங்கை கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து