முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதரை தரிசித்தார் முதல்வர் எடப்பாடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் எழுந்தருளியுள்ளார். 23-ம் நாளான நேற்று பச்சை பட்டாடை உடுத்தி மகிழம்பூ மாலை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரத்திற்கு நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரது வருகையையொட்டி மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.  அதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மநகராட்சி நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், டி.ஜி.பி. திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட கலெக்டர் பொன்னையா, எஸ்.பி.கண்ணன் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அத்திவரதரை தரிசனம் செய்ய இதுவரை 30 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட 3.41 லட்சம் வாகனங்கள் வந்திருக்கின்றன. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து