முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிய வகை டிராகன்களை பாதுகாக்க தேசிய சுற்றுலா தளத்தை மூடும் இந்தோனேஷியா

புதன்கிழமை, 24 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க, சுற்றுலா தளமாக இயங்கி வரும் பூங்காவையே அந்நாடு மூட உள்ளது.

இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில் அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளும், 26 சிறு தீவுகளும் இப்பூங்காவில் அடங்கியுள்ளன.  இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கிமீ ஆகும். இந்த பூங்கா தொடக்கத்தில், கொமோடா டிராகன் எனும் அரிய பல்லி வகையை பாதுகாக்க கடந்த 1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் கடல் உயிரினங்கள் உட்பட மற்ற உயிரினங்களை பாதுகாக்க தொடங்கியது. இதையடுத்து 1991-ம் ஆண்டு இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த பூங்காவில் வாழும் அரிய வகை கொமோடா டிராகன்களை பாதுகாக்க கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு இந்தோனேஷியா மூட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை காக்க நாங்கள் நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த டிராகன்களின் வாழ்வியல் முறை குறித்து அறியவே வருகை தருகின்றனர். எனவே ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். மேலும் சுற்றுலா பயணிகளை கணிசமாக பூங்காவிற்குள் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து