முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவுடன் இலவச விசா பெறலாம் இந்தியர்களுக்கு இலங்கை அரசு சலுகை

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இலங்கைக்கு வந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசா பெற்றுக் கொள்ளும் சலுகையை 39 நாட்டு மக்களுக்கு அளிக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால், இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, அந்த திட்டம், ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கே அறிவித்தார். 39 நாடுகளுடன் இந்தியா, சீனா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டிப்பதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து