முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் கடும் வெயில்: அனல் காற்றுக்கு ஒரே மாதத்தில் 40 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் அனல் காற்றால் பெரிதும் தவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் மேற்கு மத்திய வடகிழக்கில் உள்ள நாடுகள் வெப்பத்தின் தாக்கத்தில் ஆழ்ந்துள்ளன. இதில் குறிப்பாக இங்கிலாந்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை உயரும் என்றும் பகல்நேர வெப்பநிலை 102.2 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு பிரவர்சேம் நகரில் பதிவான 101.3 பாரன்ஹீட் மிக அதிகமான பகல்நேர வெப்பநிலை என்று இருந்த நிலையில் இப்போது அதையும் தாண்டி வெப்பம் உயர்வதால் இங்கிலாந்து மக்கள் தவிப்பிற்கு ஆளாகினர். இதை தொடர்ந்து கொளுத்தும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பிரிட்டன் மக்கள் கடலில் குதித்து உடலை குளிர்ச்சியாக்கிக் கொள்கின்றனர்.

இதையடுத்து வெப்பம் தாங்காமல் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் வெப்பநிலை அதிகரிப்பால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் அனல் காற்று வீசும் என்றும் பகல்நேர வெப்பநிலை 107.6 டிகிரியாக உயரும் என்றும் பிரான்ஸ் நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து அனல் காற்றால் பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து