முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டனில் சிறையில் உள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் ஆக.22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த நிரவ் மோடி, நெருக்கடி மிக்க லண்டன் சிறையில்  இருக்கிறார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் மறுத்து விட்டது.

இந்த நிலையில், நிரவ் மோடி நேற்று  மீண்டும் வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் ஆகஸ்ட் 22- ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து