ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமி,அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி.

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019      ராமநாதபுரம்
25 rms kovil

 ராமேசுவரம்-: ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு திபாராதணை பூஜையில் கோயில் அதிகாரிகளும்,முக்கிய பிரமூரர்களும்,ஆன்மிகவாதிகளும்,பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்ற்ததுடன் நேற்று காலையில் துவங்கியது.இதனையொட்டி திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் புதன் கிழமை இரவு சிவாச்சாரியார்களால் வாஸ்து சாந்தி செய்யப்பட்டு சிறப்பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு  அதிகாலையில் 4 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து காலை பூஜைகள் நடைபெற்று பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்கு அம்மன் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்திற்கு கலசத்தில் புனித நீரால் நிறப்பட்டு மந்திரங்கள் வாசிக்கப்பட்டு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.பின்னர் திருக்கோயில் குருக்கள் விஜய்போகில் தலைமையில் குருக்கள்கள் கொடிமரத்தில் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்து முறைப்படி 17 நாள் ஆடித்திருவிழாவை துவங்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பர்வதவர்த்தின் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோயில் தக்கார் குமரன்சேதுபதி, இணை ஆணையர் கல்யாணி,  உதவி ஆணையர் ஜெயா,மேலாளர் முருகேசன்,திருக்கோயில் உதவி்க்கோட்டபொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ்,பாலசுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்ஆலய பேஷ்கார்கள் ,அண்ணாத்துரை,கண்ணன்,கணேசன்,செல்லம் , மற்றும் ஆன்மிக வாதிகளும்,அரசியல் அமைப்பு நிர்வாகிகளும்,திருக்கோயில் அலுவலர்களும்,ஊழியர்களும்,பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
   ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:
  விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான ஜூலை 31 - ஆம் தேதி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்தக்கடலில் ஸ்ரீராமர்  பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சியும்,அன்று இரவு  பர்வதவரத்தினி அம்மன் வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 2 -ஆம் தேதி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும்,  ஆகஸ்ட் 4 -ஆம் தேதி  சுவாமி, அம்மன் தபசு மண்டபத்திற்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் பூபல்லாக்கில் எழுந்தருளி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 5- ஆம் தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து