முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிருக்கு போராடும் சூழலிலும் தங்கையை காப்பாற்றிய சிறுமி உயிரிழந்தார்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

உயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமியின் புகைப்படம் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் வீடு ஒன்றின் 5-வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், தனது 7 மாத தங்கை துகாவின் டி சர்ட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர்பிழைத்தது. மனைவியை இழந்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் உடனே மீட்க முடியாமல் பரிதவித்து கதறும் தந்தையின் காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது. இந்த விபத்தில் 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. தனது உயிர் போகும் தருவாயிலும் நெருக்கடியான சூழலில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஏப்ரலில் இருந்து கிளர்ச்சிப்படைக்கு எதிரான தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து