முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் இருந்து சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 150 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட வீரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், லிபியா நாட்டின் அல் கோம்ஸ் நகரில் இருந்து படகு ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். லிபியாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டுருந்த மீனவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்த லீபிய நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கடலில் சிக்கிய 150 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும் அவர்களது உடலை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து