முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் முயற்சி 3-வது முறையாக தோல்வி

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : விண்வெளி ஆய்வு பணிக்காக ஜப்பான் நாட்டில் தனியாரால் உருவாக்கப்பட்ட மோமோ-F4 ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் கடலுக்குள் எரிந்து விழுந்தது.

அனைத்து துறைகளிலும் உலகின் மிகவும் முன்னேற்றிய நாடுகளில் ஒன்றான ஜப்பான், சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியிலும் தனி முத்திரையை பதிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு நவீன ராக்கெட்டுகளை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் ஜப்பான் தயாரித்து வருகிறது. அவ்வகையில், 20 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய மோமோ என்ற ராக்கெட்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றன. திரவ ஆக்சிஜன் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருளால் இயங்கும் சுமார் ஒரு டன் எடை கொண்ட இந்த ராக்கெட் கடந்த 2017, 2018 ஆண்டுகளில் பரிசோதிக்கப்பட்டபோது அந்த சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதை தொடர்ந்து, கடந்த மே மாதம் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் உள்ள டய்க்கி ஏவுதளத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரம் வரை மேல் நோக்கி பறந்து செல்லும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று மோமோ-F4 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில வினாடிகளில் என்ஜினின் செயல்பாடு திடீரென்று ஸ்தம்பித்துப் போனதால் சுமார் 13 கிலோமீட்டர் மட்டுமே பறந்துச் சென்ற ராக்கெட் தீப்பிழம்பாக மாறி கீழே விழ தொடங்கியது. ஏவுதளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இதை கவனித்த விஞ்ஞானிகள் கீழே விழும் ராக்கெட்டின் பாதையை திசை மாற்றி அருகாமையில் உள்ள கடலில் விழ வைத்தனர். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த சோதனை முயற்சியில் ஜப்பான் நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து