முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க பெண் எம்.பி. வழக்கு

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான துளசி கப்பார்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதி திரட்டியும் வருகிறார். இந்தநிலையில் துளசி கப்பார்ட்டின் பிரசாரம் குறித்த தகவல்களை விளம்பரப்படுத்துவதற்காக அவரது பிரசார குழு கூகுளில் விளம்பர கணக்கு ஒன்றை தொடங்கி நிர்வகித்து வந்தது.

இந்த விளம்பர கணக்கை கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூகுள் நிறுவனம் முடக்கியதாக கூறப்படுகிறது. தகுந்த காரணம் இன்றியும், எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் விளம்பர கணக்கு முடக்கப்பட்டதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 344 கோடியே 61 லட்சத்து 75 ஆயிரம்) இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்தின் மீது துளசி கப்பார்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து