முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு துறை நிதியை பயன்படுத்தி மெக்சிகோ எல்லையில் மதில் எழுப்ப தடையில்லை : அமெரிக்க சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புத் துறை நிதியை பயன்படுத்தி மெக்சிகோ எல்லையில் மதில் எழுப்ப தடையில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த அவர் திட்டமிட்டார். இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்ப டிரம்ப் நிர்வாகம் 5.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்ட நிலையில் 1.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் பாதுகாப்புத் துறை நிதி, ராணுவ கட்டுமான நிதி உள்ளிட்டவற்றை எல்லைச் சுவர் எழுப்பப் பயன்படுத்தும் நோக்கில் அதிபர் டிரம்ப் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தார்.

பாதுகாப்புத் துறை நிதியில் இருந்து 2.5 பில்லியன் டாலர்களை பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்கன் சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து எல்லையில் சுவர் எழுப்பப் பாதுகாப்புத் துறை நிதியை பயன்படுத்த கடந்த மே மாதத்தில் விசாரணை நீதிமன்றம் தடை விதித்தது. மேல்முறையீட்டிலும் இந்த தடை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழ் நீதிமன்றங்கள் விதித்த தடையை அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீக்கியுள்ளது. பாதுகாப்புத் துறை நிதியை பயன்படுத்தி எல்லையில் சுவர் எழுப்ப ஏற்கனவே வழங்கப்பட்ட 4 ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணிகளை தொடங்கலாம் என டிரம்ப் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதே சமயம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்கு தேவையான இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை பென்டகனின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அந்நாட்டின் கலிபோர்னியா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களை ஒட்டிய எல்லைப்பகுதியில் சுவர் கட்டப்படும். இது மிகப் பெரிய வெற்றி என்று தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து