முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனிலவு சென்ற போது விபரீதம்: எரிமலையில் விழுந்த கணவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய மனைவி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டைன். இவருக்கும் அகைமி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கனவுகளோடும், கற்பனைகளோடும் மேற்கிந்திய தீவான செயின்ட் கிட்ஸ் தீவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது, சற்றும் எதிர்பாராத விதத்தில் செயல்படாமல் இருந்த ஒரு எரிமலை மீது கிளே சாஸ்டைன் தவறி விழுந்து அலறினார். அதைப் பார்த்து மனைவி அகைமி அதிர்ச்சியில் உறைந்து போனார். உதவிக்கு யாரும் அங்கு இல்லை. ஆனாலும் அகைமி சுதாரித்துக் கொண்டு கணவரை கஷ்டப்பட்டு எரிமலையில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அதன் பின்னர் இரண்டு மைல் தொலைவுக்கு கணவரை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தே மலையடிவாரம் வந்து சேர்ந்தார். மனைவி தன்னை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததை கிளேயால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பிரமித்துப் போனார். பின்னர் அகைமி, கணவரை புளோரிடா அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து