முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் அமைச்சர் பிரீதி படேலை இனவெறியுடன் விமர்சித்தவருக்கு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருக்கும் இந்திய வம்சாவளியினரான பிரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்த நபருக்கு 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யும், பிரிட்டன் உள்துறை அமைச்சருமான பிரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ம் ஆண்டில் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி 55 வயதான ஜெரார்ட் டிரெய்னர் என்பவரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ஜெரார்ட் டிரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, ஜெரார்ட் டிரெய்னரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த  டெமாகிரடிக் யூனியனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்லின் பாஸ்டரையும் வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தது தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து