முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூழ்கிய கப்பலை கடலின் அடிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட ரஷ்ய அதிபர் புடின்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : ரஷ்ய அதிபர் புடின், நீர்மூழ்கி கப்பலில் சென்று கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்டார்.

ரஷ்ய கப்பற்படை தின அணிவகுப்பில் இந்திய போர்க்கப்பலும் பங்கேற்றது. இரண்டாம் உலக போரில் கடலில் மூழ்கியது சோவியத் நீர்மூழ்கி கப்பல். அதனை ரஷ்ய கப்பற்படை தினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டார். ரஷ்யா கடற்படை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புடின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார். பின்னர் அங்கிருந்து சிறிய ரக நீர் மூழ்கி கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதியை அடைந்த அவர், 50 ஆடி ஆழத்தில் நீரில் மூழ்கி கிடந்த, 2-ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை கடலின் அடிபரப்புக்கு சென்று பார்வையிட்டார். ஆய்வுக்கு பின் கரைதிரும்பிய புடின், ரஷ்ய மக்கள் மற்றும் அவர்களின் பணிகளை நன்கு புரிந்து கொள்ளவே இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் கடலின் கீழ் பகுதிக்கு சென்றதாக தெரிவித்தார்.

ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களின் போது, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.தர்காஷூம் பங்கேற்றது. இதிலிருந்தவாறு, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஐ.என்.எஸ் தர்காஷ் கட்டளை அதிகாரி கேப்டன் சதீஷ் வாசுதேவ் வணக்கம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து