முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வெப்பசலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், வட, உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு புறம் பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. மறுபுறம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் புழுக்கமான சூழ்நிலையும், இரவு நேரங்களில் குளிர்ச்சியான நிலை மாறி, மாறி ஏற்படுகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, நீலகிரி, குற்றாலம், தென்காசி, பாபநாசம், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த நிலையில் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கிடையே அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி) தலா 6 செ.மீ, அவிலாஞ்சி (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), ஜி.பஜார் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் சென்னை, சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து