முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களுக்கு நாளை மேலும் ஒரு வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொறியியல் கலந்தாய்வில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு நாளை மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பு வருமாறு:-

இதுவரை பொறியியல் கலந்தாய்வு நான்கு சுற்றுக்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இணைய வழிக் கலந்தாய்வு மற்றும் துணைக்  கலந்தாய்வுக்கு முன்கட்டணம் செலுத்தி விட்டு கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கும் நடைபெற்ற நான்கு சுற்றுகளிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கும் ஒர் இறுதிவாய்ப்பாக நாளை (30ம்தேதி ) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியின் கலையரங்கில் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 4 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்.கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் நேரில் வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் அச்செடுத்த நகல், 10-ம் வகுப்பு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று, ( தேவைப்படும் பட்சத்தில்) மாற்றுச்சான்றிதழ் அதற்கு முன் தங்கள் வருகையை மாணவர்கள் 044- 22351014\ 1015 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது tnea2019 enquiry @gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து