சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தேனி
28 bodi news

போடி,-     போடியில், சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
     போடி நகராட்சி பகுதியில் சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை வீடுகளுக்கே சென்று சேகரித்து வருகின்றனர். முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி சில இடங்களில் பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் குப்பை மேடாக உருவாவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
     போடி நகராட்சி 20 ஆவது பகுதியில் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களை சுத்தப்படுத்தி அழகிய வண்ண கோலங்களை நகராட்சி ஊழியர்கள் போட்டு வருகின்றனர். போடி தென்றல் நகர் சமுதாய கூடம் முன்பாக குப்பை கொட்டும் இடத்தில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
     இந்த இடத்தில் சுத்தப்படுத்து, டெங்கு தடுப்பு பணியாளர்கள் அழகிய வண்ண கோலங்களை போட்டனர். மேலும் குப்பைகளை கொட்டாதீர்கள் என கோலத்திலியே எழுதி வைத்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பைகளை சாலைகளில் கொட்டக்கூடாது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும், தண்ணீர் தேங்க விடக்கூடாது என அறிவுறுத்தினர். கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்க தனி கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறோம் ஆனால் குப்பைகளை சேகரிக்க சுகாதார பணியாளர்கள் வருவதில்லை, அதனால்தான் குப்பைகளை சாலையில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் புகாரும் தெரிவித்தனர்.
     கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் பொன்ராஜ், கள அலுவலர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து