முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் லுலு வணிக வளாக வழக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் லுலு எனும் வணிக வளாகம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பகுதியில் பிரபல லுலு வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து சலீம் என்பவர் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று லுலு முறையாக கட்டப்பட்டதா? என்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், லுலு வளாகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடிக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் அனுமதி தந்திருக்க வேண்டும் என சலீம் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் ஜெயசங்கரன் நம்பியார் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு தொடர்பாக லுலு வளாகத்திற்கு ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு அந்த வளாக அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதில், முறையான அனுமதியுடன்தான் வளாகம் கட்டப்பட்டுள்ளது. குடியிருப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டிடம்தான் லுலு வணிக வளாகம். அதன்படி, 3 லட்சம் சதுர அடிக்கு குறைவாக கட்டிடம் இருந்தால் மாநில சுற்றுச்சூழல் துறையே அனுமதி தரலாம். லுலு கட்டிடம் 2 லட்சத்து 32 ஆயிரம் சதுர அடிக்கு கட்டப்பட்டுள்ளது. எனவே, மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று முறையாகத்தான் கட்டப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், லுலு வணிக வளாகம் அளித்த விளக்கத்துக்கு பதில் கூற, சலீமுக்கு கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து