முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாய மசோதா - மக்களவையில் நிறைவேறியது

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. முன்னதாக மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் கேஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்போதுள்ள தீர்ப்பாயங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் தோல்வியடைந்துள்ளன. அதன் அணுகுமுறையை மாற்றுவது அவசியம். கடந்த 33 வருடங்களாக இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பாயத்தால் முடித்து வைக்க முடியாத நிகழ்வுகள் உள்ளன. 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதில் எந்தவொரு நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என உள்ளது. எனினும், ஐந்தாண்டிற்குள் பிரச்சனை முடிக்கப்படாமல் காலம் நீட்டிக்கப்படும் போது சட்டம் தோற்றுப்போனது. தீர்ப்பாயத்தில் முறைப்படுத்தப்படாத சிலவற்றால் தீர்ப்புகள் வழங்குவது மிகக் காலதாமதம் ஆகியது.

ஒன்பது நதிநீர் தீர்ப்பாயத்தில் நான்கு தீர்ப்பாயத்தின் அறிக்கை மட்டுமே 7 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் காலதாமதத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிரண்டை தவிர மற்றவை சரியாக சரியான நடைமுறையில் செயல்படவில்லை. தற்போது கொண்டு வரவுள்ள மசோதா, பல அமர்வுகளை கொண்ட ஒரே தீர்ப்பாயம் தீர்ப்புக்கான சரியான நேரக்கெடுவை அமைக்கும். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி இதற்கு தலைவராக இருப்பார். தேவைப்படும் போது அமர்வுகள் அமைக்கப்படும். பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதுடன் அந்த அமர்வு கலைக்கப்படும். தீர்ப்பாயம் இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவு தானாகவே அரசாணையாக மாறிவிடும் என்று தெரிவித்தார். தற்போது காவிரி, மகாதயி, ரவி அண்டு பியாஸ், வன்சாதர அண்டு கிருஷ்ணா உள்பட 9 தீர்ப்பாயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து