முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் ஆற்றில் மிதந்து செல்லும் 5 மாடி கட்டிடம் - வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலை தளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இணையதள ஆர்வலர்கள் இந்த வீடியோ குறித்து வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மிதக்கும் ஓட்டலான அந்த 5 மாடி கட்டிடம் கொள்கை மாற்றம் காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2 படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டிடம் தானாகவே மிதந்து செல்வது போலவே இருப்பதுதான் அந்த வீடியோ வைரலாவதற்கு காரணம்.

ஆனால் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அப்போது இந்த வீடியோ இந்த அளவுக்கு வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து