முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் செப். 28-ல் பிரதமர் நரேந்திர மோடி - 2-வது முறையாக உரையாற்றுகிறார்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.நா. பொது சபை கூட்டத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.

ஐ.நா. பொது சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் 74 -வது உலகத்தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. மேலும் தனது நியூயார்க் பயணத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஐ.நா.வில் உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் செல்வதற்கு முன்பாக செப்டம்பர் 22-ம் தேதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசவிருக்கிறார் பிரதமர் மோடி. செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றுகிறார். செப்டம்பர் 27-ல் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர் உரையாற்றுகிறார். செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு தொடர்பான உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து