முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்: டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்தது எனவும், இரு நாடுகளும் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்புக்கு பிறகு பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக் கொண்டார் என்று டிரம்ப் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்பிடம், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும் முடிவை இந்தியா ஏற்க மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தை ஏற்றுக் கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது. மோடியும் இம்ரான் கானும் மிகச்சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சினை இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து