அமைச்சர்கள் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      உலகம்
Bomb blast in Thailand 2019 08 02

ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வரும் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பாம்பியோ உள்பட ஆசியன் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாங்காங்கில் மூன்று இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குண்டு வெடித்ததில், துப்புரவு தொழிலில் ஈடுபட்ட 3 பேர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து