முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினைக்கு இரு நாட்டு பேச்சு மூலமே தீர்வு: மத்திய அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

காஷ்மீர் பிரச்சினையில் இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்புக்கு பிறகு பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக் கொண்டார் என்று டிரம்ப் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு இருநாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றார். மோடியும், இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த நிலையில் ஜெய்சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து