முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருகும் பனிப்பாறைகளின் அதிகரிப்பால் பேரழிவை சந்திக்க கிரின்லாந்துக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் கவலை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நூக் : கிரின்லாந்து நாட்டில் 24 மணி நேரத்தில் 1,000 கோடி கிலோ எடையுடைய பனிக்கட்டிகள் உருகியிருப்பது புவியியல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பனிப்பாறை உருகி வருவதால், கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் பருவ நிலை மாற்றத்தால், வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் கொளுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகளும் தீக்கிரையாகி வருகின்றன. இந்நிலையில் கொளுத்தும் வெயிலில், நீர்நிலைகளில் படர்ந்திருந்த பனிக்கட்டிகளும் உருகத் தொடங்கியுள்ளன.

கிரின்லாந்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 71.6 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 1,000 கோடி கிலோ வரையிலான பனிக்கட்டிகள் உருகி அண்டார்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. கிரின்லாந்தில் கோடைக்காலங்களில் 50 சதவீதம் அளவிலான பனிக்கட்டிகள் உருகுவது வழக்கம். அனால் தற்போது அதிர்ச்சி தரக்கூடிய அளவில் பனிக்கட்டிகள் உருகுவது குறித்து புவியியலாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பனி பாறைகள் உருகுவது தொடர்ந்து அதிகரித்து வருவதால் கிரின்லாந்து பேரழிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து