மராட்டியத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: மும்பைக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Mumbai-and-Thane Red Alert 2019 08 03

மும்பை :  மராட்டிய மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மும்பையில் பலத்த மழை காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இரவு முழுவதும் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கோரேகோன், கண்டவாலி மற்றும் தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக மத்திய ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் புறநகர் ரயில் 15-20 நிமிடம் தாமதமானது. மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரியான சுனில் உதசி கூறுகையில்,

மழையின் காரணமாக ரெயில்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் கவனமாக இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

நேற்று மும்பை கடற்கரையில் சுமார் 4.90 மீட்டர் அளவு உயரத்திற்கு அலைகள் எழும்பின. கனமழை - கடல்சீற்றம் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதனால் கடற்கரை பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கே.எஸ்.ஹோசாலிக்கர் தெரிவித்துள்ளார். மழை இன்னும் தீவிரமடையும் எனவும், வடக்கு கொங்கன், தானே மற்றும் பால்கர் போன்ற பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தானே பகுதியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து