முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு உயரிய விருது அளித்த கினியா நாடு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

கினியா : இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கினியா நாட்டு அரசாங்கம் நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்னும் விருதையளித்து கவுரவித்துள்ளது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கினியா நாட்டு அரசாங்கம் நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்னும் விருதையளித்து கவுரவித்துள்ளது.

இது அந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதாகும். இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் முக்கிய பங்காற்றிய அவரை கவுரவிக்கும் விதமாக இவ்விருதினை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த விருதை இந்திய மக்களுக்கும், கினியா மக்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் மூன்று ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்த் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து