முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்பின் மீதான எதிர்ப்பை காட்ட நீதிபதி முன் ஆபாசமாக நடந்து கொண்ட பெண் ஆராய்ச்சியாளர்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

கம்பாலா : தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன்பாக பெண் ஆராய்ச்சியாளர் தனது மேலாடையை அகற்றி மார்பகங்களை காட்டிய நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. அங்கு நியான்சி என்ற 44 வயதான பெண் ஆராய்ச்சியாளர் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதிபர் முசேவேனியின் சர்வாதிகார போக்கையும் விமர்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் அதிபர் முசேவேனி அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது அங்குள்ள கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது அவர் காணொலி காட்சி மூலம் தோன்றி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அவர், நான் உங்கள் முன் சந்தேக நபராகவும், கைதியாகவும் நிற்பதே சர்வாதிகாரத்தின் பல அம்சங்களை எடுத்துக் காட்டுகிறது. மோசமான சர்வாதிகாரியை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளராக இருக்க நான் மறுக்கிறேன் என கூறினார். இதையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்புக்காக அவர் காணொலி காட்சி வழியாக தோன்றினார். அப்போது அவருக்கு 18 மாத தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதில் கொதித்தெழுந்த அவர் தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக மேலாடையை அகற்றி தனது மார்பகங்களை காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நியான்சிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து