முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள 17 நாடுகள் - உலக நீர்வள மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : உலக மக்கள் தொகையில் கால்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று உலக நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து உலக நீர்வள ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், உலகின் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாகவும், இதில் இந்தியாவுக்கு 13-வது இடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

உலகின் சுமார் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் பல பூஜ்ய நாளை ( நீர் முழுவதும் தீர்ந்து போகும் நாள்) நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளின் விவரம், கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா,குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், சான் மரினோ, பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான், ஓமன், துர்மெனிஸ்தான், போட்ஸ்வானா, எரிட்ரியா .இந்த நாடுகளில் சுமார் 80 சதவீதம் நிலத்தடி நீர் விவசாயம்,தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளில் தேவை அதிகரிக்கும் போது சிறிய அளவிலான வறட்சி கூட பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக கேப் டவுன், சென்னையில் ஏற்பட்ட வறட்சியை குறிப்பிடலாம். நிலத்தடி நீர் அதிக முள்ள நாடுகளில் மெக்சிகோ, நேபாளம், போர்ச்சுக்கல், மொராகோ உள்ளிட்ட 27 நாடுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து