முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: ஐ.நா. பொதுசபை தலைவர் இரங்கல்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபை தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

சுஷ்மா சுவராஜ் மறைவு கேட்டு துயரமடைந்தேன். சிறந்த பெண்மணியாக திகழ்ந்தவர். பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எனது இந்திய பயணத்தின் போது அவரை சந்தித்து பேசியதை மறக்க முடியாது. அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து