முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 74 -ம் ஆண்டு நினைவு தினம் - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது நடந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதின் 74-ம் ஆண்டு நினைவையொட்டி ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் நியூக்லியர் அணுகுண்டு தாக்குதலில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் முற்றிலும் தரைமட்டமானது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை அந்த நாடு மக்கள் இன்றளவும் சந்தித்து வருகின்றனர். வரலாற்றில் மறைக்க முடியாத நிகழ்வாக பதிவான இந்த சம்பவத்தில் சுமார் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் 74-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆங்காங்கே நடைபெற்ற இரங்கல் கூட்டங்களில் ஜப்பான் பிரதமர் சின்சு அபே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் ஜப்பானில் முடையாசு நதிக்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் வண்ண விளக்குகளை ஆற்றில் மிதக்க விட்டு அஞ்சலி செலுத்தினர். அதில் அமைதியை வலியுறுத்தும் விதமாக வாசகங்கள்எழுதி நீரில் மிதக்க விட்டுள்ளனர்.

ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் சின்னப் பையன் என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு கொழுத்த மனிதன் என்ற குறுப்பெயர் சூட்டினர். சின்னப் பையன் எனோலாகே என்ற விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான பால்டிப்பெட்ஸ் என்பவரின் தாயார் பெயர்தான் எனோலாகே என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து