முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்களுடனான பேச்சில் உடன்பாடு வீரர்களை திரும்ப பெற அமெரிக்கா முடிவு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகுவது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளில் வேறுபாடுகள் தீர்க்கப்பட்டதாக தலிபான் கூறியுள்ளது. 
நியூயார்க் நகரின் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு தகர்த்தனர். இதைத் தொடர்ந்து அல் கொய்தா தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. தலிபான்கள் அல் கொய்தாவுக்கு புகலிடம் அளித்தது ஆகியவற்றின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசுப் படைகள், அமெரிக்கர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் மறுப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த அமைதி பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரில் 5,000 பேரை திரும்பப் பெறுவது தொடர்பான அமெரிக்காவின் திட்டத்துக்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மற்ற தீவிரவாத அமைப்புகள் உடனான உறவை துண்டிக்க தலிபான்கள் சம்மதித்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாகீன் கூறுகையில், அமெரிக்கா - தலிபான் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விடுபட்ட பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசிக்கிறோம். அமைதி ஒப்பந்தம் பற்றி பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அமெரிக்கா, தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்த தேர்தல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தலிபான் இணையதளத்தில், தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்ள வேண்டாம். தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். தேர்தல் நேரத்தில் கூடும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்களின் போது நமது படையினர் தாக்குதல் நடத்தினால், அப்போது ஏற்படும் உயிர் சேதத்தை தவிர்க்க அத்தகைய இடங்களில் இருப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் அந்த தாக்குதலுக்கு நீங்களும் இலக்காக கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று மறைமுகமாக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து