முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறையில் இருந்து பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் தொடர் அழுத்தத்துக்கு அடிபணிந்த பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த மேலும் 12 பேரை கடந்த 17-ம் தேதி கைது செய்தது. பயங்கரவாதி ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் ஹபீஸ் சயீத் மீதான முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய சில நாட்களில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து