முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

தைவான் : தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோர பகுதிகளில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக நில அதிர்வு பதிவானதாகவும், யீலான் நகரில் 22 கிலோ மீட்டர் ஆழத்துக்கு நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாமல், வீடு மற்றும் ஓட்டலில் எரிவாயு மற்றும் நீர் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு சில கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இதனிடையே அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் தற்காலிகமாக மின் இணைப்புகளை துண்டிக்கப்பட்டதோடு, தைவானின் வடக்கு பகுதிகளில் ரயில் சேவையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வேறு எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து