முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியாவில் விமான விபத்து: 2 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கமரில்லோ விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மதியம் சிறு ரக விமானம் ஒன்று வந்தது. விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடுபாதையின் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய சாலை பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து