முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா நேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் மக்கள் நான், என் பெற்றோர், குழந்தையாக இருந்த போது மற்றும் என் தாத்தா, பாட்டி ஆகியோரின் இளம் வயது முதலே போராட்டத்தில் தான் இருக்கிறார்கள். 70 ஆண்டுகளாக காஷ்மீர் குழந்தைகள் வன்முறைக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள்.  தெற்கு ஆசியாவே என் குடும்பம். அதில் 1.8 பில்லியன் காஷ்மீர் மக்களும் இருக்கிறார்கள். நாம் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்கிறோம். நாம் அனைவரும் அமைதியாகத்தான் வாழ்கிறோம் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் போராட்டத்திலும், மற்றவர்களை காயப்படுத்துவதும் என இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காஷ்மீர் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து யோசிக்கும்போதுதான் மிகுந்த வருத்தமாக உள்ளது.  தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.  எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனித உரிமைகளுக்காக போராடுவது மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை அவசியமான ஒன்று. 70 ஆண்டு கால போராட்டத்தை அமைதியான முறையில் சுமூக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து