முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்துக்கு கைக்குழந்தையுடன் வந்த கென்ய பெண் எம்.பி. வெளியேற்றம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நைரோபி : கென்யாவில் பெண் எம்.பி. ஒருவர் தனது கைக்குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய எம்.பி.யான சுலைக்கா ஹசன் என்பவர் மூன்று குழந்தைகளுக்கு தாயார். இவர் புதன்கிழமை தனது ஐந்து மாத குழந்தையை பிறரிடம் ஒப்படைக்க முடியாத காரணத்தால் தூக்கிக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ஹசனை நாடாளுமன்றக் காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை மீறி உள்ளே நுழைந்த அவரை நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.

குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்து விட்டு நாடாளுமன்றத்திற்கு வருமாறு அவர் உத்தரவிட்டார். ஹசன் குழந்தையுடன் நாடாளுமன்றதிற்கு வந்ததற்கு அங்கிருந்த ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஹசனின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் அவர் குழந்தையுடன் வெளியேறினார்.

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஹசன் கூறும் போது, நான் என் குழந்தையை முடிந்த அளவு நாடாளுமன்றதுக்கு அழைத்து வரக் கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால் இன்று என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளை பாத்துக் கொள்ளக் கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். எல்லோராலும் குழந்தையை பார்த்துக் கொள்ளப் பணியாட்களை வைத்துக் கொள்ள முடியாது.

தனியார் நிறுவனங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்த சட்ட அமைப்பான நாடாளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு அதிகம் வர வேண்டுமெனில், நாடாளுமன்றம் அவர்களுக்கு குடும்ப உணர்வை தரக் கூடிய நட்புறவான சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடு சபையின் பொதுக் கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது மூன்று மாதக் குழந்தையையுடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து