ராமேசுவரம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
8 CHESS  -ramnad

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் ராமேசுவரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
    ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளத்தில் ராமேசுவரம் வட்டார அளவிலான  பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயினுலாபுதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் பதிக்குல் ஜின்னா, உதவி செயலாளர் சாகுல் ஹமீது, உறுப்பினர்கள் ஜலால் முகமது, அபுபக்கர், முஸ்லிம் பரிபாலன சபை  உறுப்பினர்கள் ஹாஜி ஏ.சீனி சதக்கத்துல்லாஹ், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை விஜி வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி போட்டியை தொடங்கி வைத்தார். ராமேசுவரம் வட்டாரத்தில் உள்ள 32  பள்ளிகளைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்  கலந்து கொண்டனர்.
    உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணதாசன், சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், முத்து முருகன், அருள் ஜோன், இருதய ராஜ், கிறிஸ்டோபர், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியைகள் கோபி லட்சுமி, லூர்து மேரி ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிக்கான எற்பாடுகளை மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் தலைமையில் உடற்கல்வி  ஆசிரியைகள் கவிதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து